Tuesday, December 11, 2012

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சே
ர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.

வரலாறு:

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் என்கிறார்கள்.

வெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.

வகைகள்:

இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.

விசேஷ குணம்:

வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.

வாங்குவது எப்படி?:

இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.

பாதுகாப்பு:

ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.

சமைக்கும் போது கவனிக்க:

இன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.

வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.

மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.

மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.

வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.

இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.

உணவுச் சத்து:

பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:

கலோரி 25, நார்ச்சத்து 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 மிஹி, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் 46 மில்லி கிராம்.

வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.

வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.

வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.

வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.

Monday, December 10, 2012

வர்மக்கலை



சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ...ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை ம
ுழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார்.

* தலைப்பகுதி வர்மங்கள் = 37
* நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
* உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
* முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
* கைப்பகுதி வர்மங்கள் = 17
* கால் பகுதி வர்மங்கள் = 32


இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

"ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே"

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்). நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன. அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது. இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன. இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன. இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன. படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்.


இவை தமிழ்ச்சித்த மருத்துவத்தின் "அக்கு பஞ்சர்" போன்ற சிகிச்சைப் புள்ளிகள் ஆகும். ஆசான் அகத்தீசர் குறிப்பிடும் உடலின் முக்கிய வர்மப்புள்ளிகளின் விரிவாக்கம்.


தலைப்பகுதி வர்மங்கள் (37)
1.திலர்த வர்மம்
2.கண்ணாடி கால வர்மம்
3.மூர்த்தி கால வர்மம்
4.அந்தம் வர்மம்
5.தும்மிக் கால வர்மம்
6.பின் சுவாதி வர்மம்
7.கும்பிடு கால வர்மம்
8.நட்சத்திர வர்மம்
9.பால வர்மம்
10.மேல் கரடி வர்மம்
11.முன் சுவாதி வர்மம்
12.நெம வர்மம்
13.மந்திர கால வர்மம்
14.பின் வட்டிக் கால வர்மம்
15.காம்பூதி கால வர்மம்
16.உள்நாக்கு கால வர்மம்
17.ஓட்டு வர்மம்
18.சென்னி வர்மம்
19.பொய்கைக் கால வர்மம்
20.அலவாடி வர்மம்
21.மூக்கடைக்கி கால வர்மம்
22.கும்பேரிக் கால வர்மம்
23.நாசிக் கால வர்மம்
24.வெட்டு வர்மம்
25.அண்ணாங்கு கால வர்மம்
26.உறக்க கால வர்மம்
27.கொக்கி வர்மம்
28.சங்குதிரி கால வர்மம்
29.செவிக்குத்தி கால வர்மம்
30.கொம்பு வர்மம்
31.சுமைக்கால வர்மம்
32.தலைப்பாகை வர்மம்
33.பூட்டெல்லு வர்மம்
34.மூர்த்தி அடக்க வர்மம்
35.பிடரி கால வர்மம்
36.பொச்சை வர்மம்
37.சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)
1.தள்ளல் நடுக்குழி வர்மம்
2.திவளைக் கால வர்மம்
3.கைபுச மூன்றாவது வரி வர்மம்
4.சுழி ஆடி வர்மம்
5.அடப்பக்கால வர்மம்
6.முண்டெல்லு வர்மம்
7.பெரிய அத்தி சுருக்கி வர்மம்
8.சிறிய அத்தி சுருக்கி வர்மம்
9.ஆனந்த வாசு கால வர்மம்
10.கதிர் வர்மம்
11.கதிர் காம வர்மம்
12.கூம்பு வர்மம்
13.அனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)
1.உதிர்க் கால வர்மம்
2.பள்ளை வர்மம்
3.மூத்திர கால வர்மம்
4.குத்து வர்மம்
5.நேர் வர்மம்
6.உறுமி கால வர்மம்
7.ஆமென்ற வர்மம்
8.தண்டு வர்மம்
9.இலிங்க வர்மம்
10.ஆண்ட கால வர்மம்
11.தாலிக வர்மம்
12.கல்லடைக் கால வர்மம்
13.காக்கடை கால வர்மம்
14.புச வர்மம்
15.விதனுமான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)
1.மேல் சுருக்கி வர்மம்
2.கைக்குழி காந்தாரி வர்மம்
3.மேல்க்கைப் பூட்டு வர்மம்
4.கைச் சிப்பு எலும்பு வர்மம்
5.பூணூல் கால வர்மம்
6.வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
7.கச்சை வர்மம்
8.கூச்ச பிரம்ம வர்மம்
9.சங்கு திரி கால வர்மம்
10.வலம்புரி இடம்புரி வர்மம்
11.மேல் சுருக்கு வர்மம்
12.மேலாக கால வர்மம்
13.கீழாக கால வர்மம்
14.தட்டேல்லு வர்மம்
15.மேலஅண்ட வர்மம்
16.நாயிருப்பு வர்மம்
17.கீழ் அண்ட வர்மம்
18.குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)
1.வலம்புரி இடம்புரி வர்மம்
2.தல்லை அடக்க வர்மம்
3.துதிக்கை வர்மம்
4.தட்சணக் கால வர்மம்
5.சுழுக்கு வர்மம்
6.மூட்டு வர்மம்
7.மொளியின் வர்மம்
8.கைக்குசத்திட வர்மம்
9.உள்ளங்கை வெள்ளை வர்மம்
10.தொங்கு சதை வர்மம்
11.மணி பந்த வர்மம்
12.திண்டோதரி வர்மம்
13.நடுக்கவளி வர்மம்
14.சுண்டு விரல் கவளி வர்மம்
15.மேல் மணிக்கட்டு வர்மம்
16.விட மணி பந்த வர்மம்
17.கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)
1.முதிர கால வர்மம்
2.பத்தக்களை வர்மம்
3.ஆமைக்கால வர்மம்
4.பக்க வர்மம்
5.குழச்சி முடிச்சி வர்மம்
6.சிறுவிரல் கவளி வர்மம்
7.சிரட்டை வர்மம்
8.கால் மூட்டு வர்மம்
9.காலக் கண்ணு வர்மம்
10.நாய்த் தலை வர்மம்
11.குதிரை முக வர்மம்
12.கும்பேறி வர்மம்
13.கண்ணு வர்மம்
14.கோணச்சன்னி வர்மம்
15.கால வர்மம்
16.தட வர்மம்
17.கண் புகழ் வர்மம்
18.அனகால வர்மம்
19.பூமிக் கால வர்மம்
20.இடுப்பு வர்மம்
21.கிழிமேக வர்மம்
22.இழிப் பிழை வர்மம்
23.அணி வர்மம்
24.கோச்சு வர்மம்
25.முடக்கு வர்மம்
26.குளிர்ச்சை வர்மம்
27.குசத்திட வர்மம்
28.உப்புக் குத்தி வர்மம்
29.பாதச் சக்கர வர்மம்
30.கீழ் சுழி வர்மம்
31.பதக்கல வர்மம்
32.முண்டக வர்மம்

நன்றி♥.

ஜில்லுன்னு ஐஸ் டீ குடிக்கிறீங்களா? கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்களேன்!

ஜில்லுன்னு ஐஸ் டீ குடிக்கிறீங்களா? கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்களேன்!

அதிக அளவில் ஐஸ் டீ குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதற்கு தொடர்ந்து ஐஸ், டீ குடிப்பதும் ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
...
ஆக்சலேட் வேதிப்பொருள்

ஐஸ், டீயில் அதிகமாக உள்ள ஆக்சலேட் என்னும் திடப்பொருள் கலவை சிறுநீரக கற்களை உருவாக்கும் மூல வேதியல் பொருள் என அறியப்பட்டுள்ளது. இவை சிறுநீரில் உப்பாகவும், தாதுக்களாகவும் தேங்கி நின்று சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன என்று சிகாகோவில் உள்ள லயோலா மருத்துவ கல்லூரியின் சிறுநீரக இயல்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜான்மில்னர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

தண்ணீரை விட சுவையாக உள்ளது. குறைந்த கலோரிகளை கொண்டது என்பதற்காக ஏராளமான மக்கள், அதிகமாக ஐஸ், டீயை பருகும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.

அடிக்கடி குடிக்காதீங்க

ஆக்சலேட் படிமங்கள் தீங்கற்றவையாக கருதப்பட்டாலும், இவை பெரிய அளவில் வளர்ந்து சிறுநீரக பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. எனவே இந்தியாவின் தட்ப-வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஐஸ், டீ குடிக்கும் பழக்கத்தை நாம் கைவிடவேண்டும் என்று சிறுநீரகவியல்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதை சாப்பிடக்கூடாது

மேலும், ஆக்சலேட் எனப்படும் மூலப்பொருள் அதிகம் கொண்ட பசலைக்கீரை, சாக்லேட், உப்பு, பயறு மற்றும் இறைச்சி வகைகளும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் காரணிகளான பிற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிங்க

சிறுநீரக கல் அடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் சிறுநீரக கற்களின் வளர்ச்சியை எலுமிச்சைப்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கட்டுக்குள் வைக்கும். எனவே எலுமிச்சை ரசம், ஜூஸ், பார்லி போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஆகியவற்றை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து விடுபட முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா????

தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா????

இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்ப ம் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல்
...ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. துவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.

Sunday, December 9, 2012

புகைத்தலினால் ஏற்படும் பாதிப்பு பற்றிய தகவல்.

புகைத்தலினால் ஏற்படும் பாதிப்பு பற்றிய தகவல்.

சும்மா ஒரு ஸ்டைலுக்காக, வேலைப்பளு, மன உளைச்சல் மற்றும் காதல் தோல்வியை மறக்க போன்ற பல்வேறு காரணங்களினால் விளையாட்ட
ாக புகைப்பழக்கம் தொடங்குகிறது. விளையாட்டு வினை ஆனது என்பது போல விளையாட்டாக தொடங்கும் இந்த புகைப்பழக்கம் ஒருவரது புத்திக்கூர்மையை குறைத்துவிடுகிறது, ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் கண்புரை நோயை ஏற்படுத்துகிறது என்று குண்டைத் தூக்கிப்போடுகின்றன புகைப் பழக்கம் குறித்த ஆய்வுகள்.

புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் ஞாபக சக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக 2 1/2 வருடங்களுக்கு முன்பு புகைப்பழக்கத்தை கைவிட்டவர்கள், புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37 சதவிகிதம் நன்றாகவும் செயல்பட்டது தெரியவந்தது.
புகைப்பழக்கத்தை கைவிடுவது உடல் நலனுக்கு பல நன்மைகளை உண்டாக்கும் என்பது நாமனைவரும் அறிந்த செய்தி. ஆனால், புகைப்பழக்கத்தை கைவிடுவதால் அறிவு சார்ந்த செயல்திறனும் அதிகரிக்கிறது என்பது இந்த புதிய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர், முனைவர் டாம் ஹெபர்னான்!
இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் `பின்னோக்கிய ஞாபக சக்தி' (அதாவது, ஒரு விஷயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறன்) மேம்படுகிறது என்பது தெரியவந்தது. ஆனால், இந்த புதிய ஆய்வின் நோக்கம் ஆய்வில் கலந்துகொண்டவர்களின் `தொலைநோக்கு ஞாபக சக்தி'யை (அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதை செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதே! உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.

அதெல்லாம் சரிதான், புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியவந்துள்ளதா?
புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து திட்டவட்டமாக எதுவும் தற்போது தெரியவில்லையென்றாலும், நீண்டகால புகைப்பழக்கத்துக்கும் மூளையின் சில திசுக்கள் சிதைந்துபோவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும், ஆய்வாளர் களின் யூகப்படி, புகைப்பழக்கமானது மூளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் `தொலை நோக்கு ஞாபக சக்தி'யுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கத.

சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, பல்லாயிரக்கணக்கான புகைப்பவர்களை நீண்டகாலம் சோதனை செய்வதன்மூலம் கிடைக்கும் முடிவுகளைக்கொண்டு மீண்டும் ஊர்ஜிதம் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் மூத்த ஆய்வாளர் டாம் ஹெபர்னான்.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை, நமக்குத் தெரியாமலேயே நமது தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்று தெரிகிறது. ஆக, இனி பொதுநல நோக்குள்ளவர்கள் `புகைக்காதே புகைக்காதே... உன் தொலைநோக்கு ஞாபக சக்தியை குறைக்காதே குறைக்காதே' என்று கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போனால்கூட தப்பில்லை என்றே தோன்றுகிறது!

வீட்டிலேயே பேஸியல்

வீட்டிலேயே பேஸியல் செய்து கொள்வது பற்றி ...

முகத்திற்கு பேஷியல் தானாகவே செய்து கொள்ளும் போது கவனக் குறைவாக சரியாக செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும்.
அலர்ஜி எரிச்சல் ஏற்படலாம். சரியான க்ரீம்மை அளவாகப் போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறியும் கூட தானே செய்து கொள்ளக் கூடாது.

இனி வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். முகத்தினை நரம்புகள் தெரியாமல் மசாஜ் செய்யக் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவி விட்டு சில வகை பேக்குகளை மட்டுமே போடலாம்.

உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் வாஸலீன் அல்லது கிளிசரின் தடவவும், பால், ஓட்ஸ், பாதம் எண்ணெய் சிறு துளிகள் கலந்து போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

சாதாரண சருமம் உள்ளவர்கள் ஒரு பிடி புதினா, இரண்டு வேப்பிலை, இரண்டு துளசி இலைகளை அரைத்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறி முகத்தைக் கழுவலாம்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பன்னீர், ஓட்ஸ், ஆஸ்ட்டிரிஞ்சன்ட், தயிர், எலுமிச்சைச்சாறு, ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

முகம் பளபளப்பாக இருக்க பாசிப்பயிறு, சம்பங்கி விதை, கார்போக அரிசி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து அதில் சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் பாக் போல் வாரம் ஒரு முறை போட்டு சில நிமிடங்கள் ஊறி பிறகு கழுவ வேண்டும்.

ரசாயன வகை கிரீம்களையும் மற்ற அழகு சாதனங்களையும் உபயோகிக்கும் போது முகம் உடனடியாக பளபளப்பாகி பலன் அளிப்பது போல் தோன்றினாலும், நாளாவட்டத்தில் முகத்தின் பொலிவு மறைந்து விடும். அதுவே மூலிகைகளை உபயோகித்து வந்தால் பலன் தெரிய சில காலம் ஆனாலும் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

ஏழைகளின் டானிக் முருங்கைக்கீரை.

ஏழைகளின் டானிக் முருங்கைக்கீரை.

முருங்கைக்கீரை என்றவுடன் நம் எல்லோருக்கும் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகம் வரும். ஆனால் முருங்கைக்கீரையில், மற்ற உணவுப்பொருட்களில் இல்லாத அற்புதமான வைட்டமின்,இரும்பு சத்துக்கள் இருப்பதை நம்

மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம். பெரும்பாலும் இது இலவசமாகவே கிடைப்பதால், இதனை பலர் அலட்சியப்படுத்துகிறார்கள். இதில் உள்ள பயன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

தேங்காயை கற்பக விருட்சம் என அழைப்பது போல முருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றனர். இக்கீரை மரத்தில் கிடைப்பதால் நிறைய பஞ்சபூத ஆற்றல்கள் உள்ளன. மனிதர்கள் சாப்பிடக்கூடிய கீரைகளில் மிகவும் முக்கியமாக சாப்பிடக்கூடிய கீரை முருங்கையும், கறிவேப்பிலையும் தான். ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக்கீரை. மலிவானது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. மனித குலத்திற்கு என படைக்கப்பட்ட முதல் தர கீரை முருங்கையாகும்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையையும் அகற்றும்.

தலை முடி நன்கு வளர தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக்க்கீறை சூப் செய்யும் முறையை தற்போது பார்ப்போமா?

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

தினமும் இந்த முருங்கைக்கீரை சூப் பருகினால் தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக்கீரையை இனியும் நாம் உதாசீனப்படுத்தாமல், தினமும் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம்.