Thursday, September 26, 2013

BACK PAIN Natural Remedies

BACK PAIN Natural Remedies ~

• Ginger juice and salt to be mixed and massaged

• Massage back with hot olive oil (always use hot oil for massage, it is very effective)

• Clove oil massage

• ½ teaspoon Ajwine and ½ teaspoon ghur to be chewed well twice a day. If back pain is very severe then increase the quantity to 1 teaspoon each.

Monday, September 23, 2013

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

8 Minutes workout for Fitness


Friday, September 20, 2013

நீண்ட நாள் சளியை குணப்படுத்தம் ஆயுர்வேத மருந்து !

நீண்ட நாள் சளியை குணப்படுத்தம் ஆயுர்வேத மருந்து !

அதிக அளவில் சீற்றமடைந்த கபம் மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் பகுதியில் சேரும்போது அடைப்பை ஏற்படுத்துகிறது.மூச்சு சீராகச் சென்றுவர முடியாமல் இருப்பதால் நாம் வேக வேகமாக மூச்சை இழுத்து விடுகிறோம்.நீங்கள் முக்கியமாக கபத்தைச் சீற்றமடையச் செய்யும் உணவையும்,செயல்பாடுகளையும் தவிர்ப்பது நல்லது.

கபம் சீற்றமடையாமல் இருக்க செயக்கூடாதவை :

பகலில் உறங்குதல், உடற்பயிற்சி செய்யாமை,உடலுழைப்பு இன்மை,இனிப்பு, புளிப்பு, உவர்ப்புச் சுவைகள் உள்ள பொருள்களை அதிகமாக உட்கொள்ளுதல், குளிர்ச்சி, எளிதில் செரிக்காத உணவு, சம்பா அரிசி, உளுந்து, கோதுமை, எள்ளு, அரிசி போன்றவை மாவினால் செய்யப்படும் தின்பண்டங்கள், தயிர், பால், கரும்புச் சாறு, நீர் மற்றும் நீர்ப்பாங்கான இடங்களில் வசிக்கும் விலங்குகளின் இறைச்சி, சுரைக்காய், பூசணி போன்ற கொடிகளில் காய்க்கும் காய்கறி வகைகள், உண்ட உணவு செரிமானடையும் முன் மீண்டும் உண்பது ஆகியவை கபத்தைச் சீற்றமடையச் செய்யும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கபம் சீற்றமடையாமல் இருக்க செய்யவேண்டியவை :

தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சளி கட்டாதிருக்க கசப்பு, காரம், துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகள் சாப்பிட நல்லது. தினமும் உடல் சக்திக்கு தகுந்தவாறு உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்வது அவசியம். உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தான்யங்கள் சாப்பிட உகந்தது. அரிசியை உணவாக மிதமாகச் சேர்க்கலாம்.


சுக்கு, மிளகு,கண்டந்திப்பிலி சேர்த்துக் காரமாய் உள்ள ரஸம் சாதம் சாப்பிட நெஞ்சுக் கூட்டில் படிந்திருக்கும் சளி இளகி மூச்சு சீராகச் செல்ல வழியை ஏற்படுத்தித் தரும். இதனால் இளகிய சளியை வெளியே கொண்டுவர வசம்பு, கடுகு, இந்துப்பு இவற்றை சம அளவு சூர்ணம் செய்து சிறிதளவு வெந்நீருடன் கலக்கி சாப்பிட்டு, மேலும் வெந்நீர் நிறைய குடிக்கவும். உடனே வாந்தி வரும். கபம் வெளியே வந்துவிடும். பிறகு மஞ்சள், ஓமம் இரண்டையும் தூளாக்கி துணித்திரியில் சுற்றிக் கொளுத்தி வரும் புகையை மூக்கினாலும் வாயினாலும் உறிஞ்சவும். நீலகிரித் தைலத்தை கொதிக்கிற வெந்நீரில் ஊற்றி ஆவி முகத்திலும் தலையிலும் படும்படியாக வேது பிடிக்கவும்.

ஆயுர்வேத மருந்து :

ஆயுர்வேத மருந்துகளில் தசமூலகடுத்ரியாதி கஷாயம் 3 ஸ்பூன் , 60 மி.லி கொதித்து ஆறிய தண்ணீர், கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 1 மாத்திரை சுவாஸனந்தத்துடன் வெறும் வயிற்றில் சாப்பிடவும். வாஸாரிஷபம் 15 மிலி+ தசமூலாரிஷ்டம் 15 மிலி + 1 வில்வாதி மாத்திரையை அரைத்து அதனுடன் கலந்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். இரவில் படுக்கும் முன்பாக 5 கிராம் அகஸ்திய ரஸாயனம் எனும் லேகியத்தை நக்கிச் சாப்பிடவும். 48 நாட்கள் வரை இம்மருந்தை சாப்பிடலாம்.

Thursday, September 12, 2013

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்


 




அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

கடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பவுடர் : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பவுடர் : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பவுடர் : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது


Saturday, September 7, 2013

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர். இரண்டுமே தவறான விஷயங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது. மிதமான அழுத்தம் கொடுத்து (படத்தில் காட்டியிருப்பது மாதிரி) குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும். ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. அதில் உள்ள சிலிக்கா பவுடர், பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.

வாய் துர்நாற்றம் நீங்க....

அஜீரணம், அதிக அமிலத்தன்மை, அதிகப் பித்தம் ஆகியவை வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள். இதைப் போக்க சீரகத்தைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்தலாம். பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய்ப் புண் ஆகியவற்றாலும் துர்நாற்றம் ஏற்படலாம். இவை ஆரம்ப நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருப்பதால், அந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது நல்லது. பிரண்டையைத் துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை வாயில் அசைபோடலாம். இந்தப் பொருட்கள் துர்நாற்றத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதுடன், அஜீரணத்தையும் குணமாக்கும்.