Monday, November 4, 2013

Juice for Sinus

A fruit and vegetable juice has been recommended by a homeopath doctor while treating for sinus. It is recommended that this juice, which improves ones immunity, should be had along with breakfast. The following is the method to make the same.
Ingredients:
  • One carrot
  • One Tomato
  • Hand full of Pomegranate
  • A Slice of Beet root
  • Few drops of Lime Juice
  • Honey or Sugar for sweetness
Method:
  • Chop all the fruits and vegetables in to big pieces.Shell the pomegranates.
  • Blend it in the mixer.
  • Strain it and add lime juice and sugar or honey and mix well.
Juice for Sinus1

Wednesday, October 30, 2013

சிறுநீரகத்தில் கல் வந்தால் என்ன செய்வோம்?

சிறுநீரகத்தில் கல் வந்தால் என்ன செய்வோம்?
முதலில் டாக்டரிடம் அட்வைஸ் பெறுவோம்,
அதற்கு 300 ரூபாய் கன்சல்டிங் பீஸ்.

மருந்து மாத்திரைகளுக்கு ஒரு 800 ரூபாய்

ஒரு வாரம் கழித்து ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பார்
அதற்கு ஒரு 2000 ரூபாய் செலவு

அதன் பின் கல்லின் அளவைப் பொறுத்து சிகிச்சை என்ன என்று தீர்மானிப்பார் மருத்துவர்

கல்லின் அளவு 3 மில்லி மீட்டர் அளவுக்குள் இருந்தால்
தொடர்ச்சியான மருந்து மாத்திரைகள்..
செலவு நம் பர்ஸின் கனத்தையும் மீறினதாய் இருக்கும் நிச்சயமாய் பின்னர் திரும்பவும் ஸ்கேனிங் அதற்க்கும் செலவு

ஒருவேளை கல்லின் அளவு 5 மில்லி மீட்டருக்கும் மேல் இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை அல்லது சிறிய துளையிட்டு அதன் வழியாக கல்லை வெளியே எடுக்கும் லேப்ராஸ்கோஃபி முறை...

அறுவை சிகிச்சைக்கும் லேப்ராஸ்கோஃபிக்கும் ஆகும் செலவு கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கி விடும்..

இதற்கெல்லாம் மேலே இந்த சிகிச்சை செய்து முடிக்கும்
வரை வலியையும் வேதனையையும் தாங்கி கொள்வதுதான்..

பாரம்பரிய எளிய வைத்தியம் :-

வாழைமரத்தை தரையோடு வெட்டி விட்டு அதன் வேர்த்தண்டு பகுதியில் பள்ளம் போன்று செய்து கொள்ள வேண்டும்...

அதில் வாழையின் நீரானது சாறு போல வடியும்.. அதில் சிறிதளவு சீரகத்தை போட்டு வைக்கவும்.

அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பல்லில் படாமல் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் கற்கள் அளவில் சிறிதாகி (கரைந்து) சிறுநீர் வழியாக வெளியேறி விடும்...
வலியும் பெரிய அளவில் இருக்காது...
பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது...

பாரம்பரியம் காப்போம்...............

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?


என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.


பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..


நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.


இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..


கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.


வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்....

{கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன்... எவ்வளவு உபயோகிக்க வேண்டும், எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் தெரிந்தவர்களிடம் உறுதி செய்து கொள்ளவும்.

Tuesday, October 29, 2013

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!



கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!

* ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic)

* ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை

* வலி, வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை

* காய்ச்சலை போக்கும் தன்மை

* கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை

* மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை

* நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator)

* கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை

மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:-

* ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும்.

* துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும்.

* ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.

Sunday, October 20, 2013

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறத ு.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.

Saturday, October 19, 2013

7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி

7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி

உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் ” பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” !

இது பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை “பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி.

இம்முறையை அமெரிக்காவின் “Agriculture and Food and Drug Administration” அங்கீகரித்துள்ளது.

ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் !

இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் :

முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக

இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.

மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)

நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம்

ஐந்தாம் நாள் : காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி.

இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி.

நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்

ஆறாம் நாள்: காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள்

இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். beef (மாட்டு கறி)

ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் !

எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !

இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும்

இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:

காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்

காலை உணவு: இட்லி ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.

காலை 11 மணிக்கு : ஒரு டம்ளர் மோர்

மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்

நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை

எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்

இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.

இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .

“வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு எப்படி நாளை ஓட்ட முடியும் பசிக்காதா? “என கேட்கிறீர்களா? ஆனால் மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் இதில் முதலில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !