Tuesday, October 30, 2012

Things to Note down If you planning for Baby


அசாதாரண செயல்களாலும் கர்ப்பம் தடைபடுமாம்!!!

தற்போது கர்ப்பம் தரிப்பது என்பது மிகவும் சுலபமான விஷயம் அல்ல. இந்த உலகில் ஒரு பெண்ணிற்கு உள்ள பெரிய கடமை, அழகு என்று சொல்ல வேண்டுமென்றால் அது கர்ப்பம் தான். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் அத்தகைய அழகான ஒரு உயிரைப் பெற்றெடுக்க சிலரால் முடியவில்லை. அதற்காக அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்வார்கள். இருப்பினும் அந்த பிரச்சனை ஏற்படுவதற்கு
முதல் காரணம் மனஅழுத்தம் மற்றும் ஒரு சில அசாதாரண செயல்களும் ஒரு வகையில் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்தகைய செயல்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தவிர்க்கப் பாருங்கள். சரி இப்போது அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சாக்லேட்: உங்களுக்கு தெரியுமா சாக்லேட்டில் அதிகமான காப்பைன் என்னும் பொருள் உள்ளது. இதனால் தான் நிறைய பேர் அதன் சுவைக்கு அடிமையாகி, அதனை சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். காப்பைன் உடலுக்கு மிகவும் பாதிப்பானது. அதிலும் கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் இதை சாப்பிட்டால், அவர்களது கர்ப்பம் தடைபடும். ஆகவே சாக்லேட் மிகவும் பிடிக்கும் என்று சொல்பவர்கள், கர்ப்பமாக ஆசைப்படுகிறீர்கள் என்றால் இதை தவிர்க்க வேண்டும்.

பைக் பயணம்: நீண்ட தூரப்பயணம் கருப்பையை மிகவும் மென்மையாக்கும். அதிலும் இருச்சக்கர வாகனங்களில் பெண்கள் செல்வது என்பது மிகவும் தவறானது. ஏனெனில் கர்ப்பமாக நினைக்கும் போது, அவர்கள் நிச்சயம் அத்தகைய பயணத்தை தவிர்க்க வேண்டும். ஆகவே கர்ப்பமாக முயற்சிக்கும் போது, எப்போதும் சற்று நீண்ட தூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

பல் பிரச்சனைகள்: பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களின் உடலில் இருந்து நிறைய கால்சியச் சத்துக்கள் வெளியேறும். மேலும் ஈறுகளில் பிரச்சனை அல்லது ஏதேனும் நோய் இருந்தாலும், கர்ப்பம் தடைபடும். ஏனெனில் கால்சியம் குறைபாட்டை நமது பற்கள் மற்றும் ஈறுகளை வைத்தே சொல்ல முடியும். ஆகவே குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் ஈறுகள் மற்றும் பற்களின் மீது நல்ல கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

குண்டாக இருப்பது: குண்டாக இருக்கும் பெண்களுக்குத் தான் பெரும்பாலும் இத்தகைய பிரச்சனை ஏற்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கு உடலில் ஹார்மோன் செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். க்ரிலீன் என்னும் ஹார்மோன் தான், இனப்பெருக்க செயல்பாட்டை செய்வது. ஆனால் அது குண்டாக இருப்பவர்களுக்கு குறைவாக இருக்கும். எனவே தான் கர்ப்பம் தடைபடுகிறது.

அழகு பொருட்களில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் : அனைவருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றிவிடும் என்று தான் தெரியும். ஆனால் அதுவே, கர்ப்பமாக நினைப்பவர்களுக்கு அது பக்கவிளைவை ஏற்படுத்தும். அனைத்து பெண்களுமே முகத்திற்கு ஏதேனும் கிரீம்களை பயன்படுத்துவார்கள். அவற்றில் ஆன்டி-ஏஜிங் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தற்போது தேசிய அறிவியல் அகாடமியில் உள்ள ஒரு ஆய்வின் படி, பெண்கள் பயன்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அவர்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறது. ஆகவே இந்த நேரத்தில் அதனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

எனவே, மேற்கூறிய அனைத்து செயல்களையும் கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் தவிர்த்து வந்தால், ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்து மகிழலாம்.

No comments:

Post a Comment