Tuesday, July 9, 2013

தண்டு கீரை மகிமை



• முளைக் கீரை வளர்ந்து பெரிதானால் தண்டுக் கீரை. தண்டுக் கீரையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெளிர் பச்சை மற்றொன்று சிவப்பு. இதில் சிவப்பு நிறத் தண்டுக் கீரை சத்தும் ருசியும் அதிகமுள்ளது.
• வெண்கீரைத் தண்டில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது.
• வெண்கீரைத் தண்டைச் சமைத்துச் சாப்பிடுவதால் நீர்க்கடுப்பு நீங்கும். மூலச்சூடு தணியும், உடல் குளிர்ச்சியாகும்.
• சிவப்பு நிறக் கீரைத் தண்டு பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைக் குணமாக்குகிறது.
• சிவப்பு கீரை சூட்டைத் தணிக்கும், மலச்சிக்கலைப் போக்கும், குடற்புண்ணை ஆற்றும்.
• வெண்கீரைத் தண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொந்தி கரையும். வாதம் உள்ளவர்கள் வெண்கீரைத் தண்டை சாப்பிடக் கூடாது.

No comments:

Post a Comment