Friday, May 23, 2014

காலை உணவு

காலையில்தான் மிகச் சிறப்பான தேர்ந்தெடுத்த உணவு மிக அவசியம்.
இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைச் சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிதையத் தொடங்கும் என்பது ஏன் பலருக்கும் புரிவது இல்லை. காலை உணவின் மூலம் இரைப்பையை நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு எழும் அகோரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வென்னிலா மில்க்ஷேக் என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபேட் கொழுப்பும் கலோரியும் அடிவயிற்றில் படிந்து பெருகும்.
- ஆறாம் திணை

No comments:

Post a Comment